நீட், அவசர சட்டத்திற்கு சிக்கல்

தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து ஒராண்டுக்கு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்திற்கு மத்திய மனித வளம் மற்றும் சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால் இது குறித்து கருத்து கேட்டுள்ள மத்திய சுகாதார துறைக்கு மத்திய அரசு வழக்கறிஞர் கூறுகையில் இந்த ஆண்டு நீட் தேர்வு முடிந்து விட்டது ஆகையால் தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது நல்லதல்ல ஒப்புதல் அளிதால் இது தவறான முன் உதாரணமாகி விடும் என்று தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் தெரிவித்துள்ளார்

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரின் இந்த கருத்தால் தமிழகத்திற்கு நீட் அவசர சட்டத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரனைக்கு வரவுள்ள நிலையில் இவ்வாறு மத்திய அரசின் நிலைபாடு திடீர் மாற்றம் இந்த வழக்கில் தமிழகத்திற்கு சாதகமாக அமையுமா என்பது கேள்வி குறியாகவே உள்ளது