உள்ளம் உள்ளவரை – திரைவிமர்சனம்

கோயம்புத்தூரில் பொள்ளாச்சிக்கு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த தம்பதிகளான ஷங்கர் – மீனு கார்திகா சொந்த ஊரில் இருந்து நகரத்து வருகின்றனர். அங்கு தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் நடத்தி வருகையில், திடீரென அவர்களது வாழ்க்கையை புரட்டி போடும் சம்பவம் ஒன்று நிகழ்கிறது. மீனு கார்த்திகாவை மர்ம நபர்கள் சிலர் கொலை செய்து விடுகின்றனர். கிராமத்திலிருந்து சென்னை வரும் இளைஞன் ஒருவர் எதிர்பாராத வகையில் இந்த கொலைப்பழியில் சிக்கிக் கொள்கிறான். 

அவளது கொலையில் இருக்கும் மர்மம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், மீனு கார்த்திகா வேறு ஒரு பெண்ணின் உடலில் புகுந்து தன்னை கொன்றவர்களை பழிவாங்க துடிக்கிறது. இதற்கிடையே நடக்கும் பல்வேறு பிரச்சனைகளும், அதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. செய்யாத குற்றத்துக்கு பழிசுமக்கும் அந்த இளைஞன் அதிலிருந்து மீண்டானா? கொலை செய்யப்பட்ட மீனு கார்த்திகா பேயாக மாறி கொன்றவர்களை பழிவாங்கினாளா? என்பதே படத்தின் மீதிக்கதை.