கமலின் அரசியல் விமர்சனத்திற்க்கு முதல்வரின் பதில்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், நீட் விவகாரத்தில் தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக தொடர்ந்து மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தத்தை கொடுத்து வருகிறது. இதுகுறித்து பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து வலியுறுத்தியுள்ளோம்.

ஆறுகுட்டி எம்எல்ஏ குறித்த கேள்விக்கு, ஆறுகுட்டி எம்எல்ஏ திரும்பி வந்தால் நாங்கள் ஏற்றுக் கொள்வோம். மேலும் கமலின் அரசியல் விமர்சனம் குறித்து முதல்வர் பேசுகையில், கமல் ஒரு திரைப்பட நடிகர் அவர் அரசியலுக்கு வரும் பட்சத்தில் அதனை பற்றி கருத்து தெரிவிப்பேன் என்று கூறினார்.