பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்

தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு, தேசிய அளவிலான டி20 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கவும், கிராமங்களில் உள்ள வீரர்களுக்கு டி 20 அளவிலான போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. அதன்படி, டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 2-வது சீசன் போட்டிகள் இன்று தொடங்குகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனான ஆல்பர்ட் டூடி பேட்ரியாட்ஸ் உட்பட 8 அணிகள் களமிறங்க உள்ளன.

இதன் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியனான தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் இன்று சென்னையில் மோதுகின்றன. முன்னதாக மாலை 6 மணி முதல் 7 மணி வரை தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோணி, மோஹித் சர்மா, பத்ரிநாத், பவன் நெகி, ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன், முரளி விஜய் அதனைத் தொடர்ந்து 7.15 மணிக்கு போட்டி தொடங்கும் என்றும் டிஎன்பிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.