ஷோக்காளி மைனர் – திரைவிமர்சனம்

சந்தோஷமாக வாழ்க்கையை நாகர்ஜுனாவும், ரம்யா கிருஷ்ணனும் வாழ்ந்து வருகின்றனர். கோபியர் கொஞ்சும் ரமணா என்பதற்கு நாகர்ஜுனா தான் உதாரணம் என்று சொல்லும் அளவிற்கு பெண்களுக்கு அவர் மீது ஒரு ஈர்ப்பு இருக்கிறது. ஒரு ப்ளே பாயாகவே வாழ்ந்து வரும் நாகர்ஜுனா திடீரென சாலை விபத்து ஒன்றில் இறந்து விடுகிறார்.  இந்நிலையில், கர்ப்பிணியாக இருக்கும் ரம்யா கிருஷ்ணன் ஆண் குழந்தையை பெற்றெடுக்கிறார்.

தனது மகனை அப்பாவை போல இல்லாமல், பெண்கள் வாடையே இல்லாமல் வளர்த்து வருகிறார். பெண்களின் பழக்கமே இல்லாமல் அப்பாவுக்கு அப்படியே எதிர்மறையாக வளரும் மகன், பெரிய ஆளாக மாறும் போது, பார்ப்பதற்கு நாகர்ஜுனா ஜாடையிலேயே இருக்கிறார்.  இதையடுத்து, அமெரிக்காவில் வேலை பார்த்து வரும், மகன் நாகர்ஜுனாவுக்கு, லாவண்யா திரிவாதியை திருமணம் செய்து வைக்கிறார் ரம்யா கிருஷ்ணன். இவ்வாறாக திருமணம் முடிந்து 3 வருடங்கள் ஆகியும் இருவருக்கும் இடையே எந்தவித காதலோ, உறவோ ஏற்படவில்லை. மேலும் இருவரும் ஒருவரையொருவர் விட்டு பிரியவும் முடிவு செய்கின்றனர்.

 இதையடுத்து இந்தியா வரும் மகன் நாகர்ஜுனா தனது முடிவை ரம்யா கிருஷ்ணனிடம் தெரிவிக்கிறார்.  ரம்யா கிருஷ்ணன் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றும் முடியாததால், தனக்காக ஒரு வாரம் ஒன்றாக சேர்ந்து வாழும்படி கூறுகிறார். ரம்யா கிருஷ்ணனின் பேச்சைக் கேட்டு இருவரும் ஒன்றாக வாழ்கிறார்கள். அப்பாவுக்கு நேர் எதிராக மகன் வளர்ந்திருப்பதை பார்த்து வருத்தப்படும் ரம்யா கிருஷ்ணன், தனது கணவர் படத்தின் முன்பு கண்கலங்க, எம தர்மன், அப்பா நாகர்ஜுனாவை பூலோகத்திற்கு அனுப்பி வைக்கிறார். இவ்வாறாக பூலோகம் வரும் அப்பா நாகர்ஜுனா, ரம்யா கிருஷ்ணன் கண்ணுக்கு மட்டுமே தெரிரிகிறார்.

பூலோகித்திற்கு வந்த அப்பா நாகர்ஜுனா, தனது மகன் நாகர்ஜுனா உடலில் புகுந்து தனது மகனையும் – மருமகளையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் இறங்குகிறார். அவரது முயற்சிக்கு பலன் கிடைத்ததா? இருவரும் இணைந்தார்களா? அதற்கிடையே அவரது அப்பாவின் சாவில் மர்மம் இருப்பது மகன் நாகர்ஜுனாவுக்கு தெரிய வர அதனை கண்டுபிடித்து, தனது அப்பாவை கொன்றவர்களை பழிவாங்கினாரா? மீண்டும் லாவண்யாவுடன் இணைந்து புது வாழ்க்கையை ஆரம்பித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை. 

இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்