இன்று இங்கிலாந்தில் பாராளுமன்ற தேர்தல்

இங்கிலாந்து பாராளுமன்றத்திற்கு இன்று தேர்தல் நடத்தப்படுகிறது அந்த நாட்டில் உள்ள 650 பாராளுமன்ற தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் முதலில் தெரசா மேயின் கன்சர்வேடிவ் கட்சிக்கு எதிர்க்கட்சியான தொழிற்கட்சியை விட 20 சதவீதம் ஆதரவு இருப்பதாக காட்டின.

ஆனால் இந்த ஆதரவு குறைந்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் வெளியான கருத்துக்கணிப்பு முடிவு, தொழிற்கட்சியை விட கன்சர்வேடிவ் கட்சிக்கு ஒரு சதவீதம் மட்டுமே கூடுதல் ஆதரவு இருப்பதாக காட்டுகிறது. கன்சர்வேடிவ் கட்சிக்கு 41.6 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் எதிர்க்கட்சியான தொழிற்கட்சிக்கு 40.4 சதவீதம் பேர் ஆதரவு அளிக்கின்றனர்.