அமைச்சர் விஜயபாஸ்கர், தன் மீதான குற்றசாட்டை மறுத்துள்ளார்

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊடகங்களில் குறிப்பிடப்படும் மாதவ்ராவ் என்ற நபரை தான் நேரடியாகவோ மறைமுகமாகவோ சந்தித்‌தது இல்லை. தனக்கு பிடிக்காத சிலர் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்பி தன்னை அழித்துவிடலாம் என மனப்பால் குடிக்கிறார்கள். தனக்கு மடியில் கனமில்லை எனவே வழியில் பயமில்லை குட்கா மற்றும் பான்சாலா விவகாரத்தில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சட்ட ரீதியாக எதிர்கொள்ளப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.