கே.எஸ்.ரவிக்குமார், செல்வராகவன்,வனிதா, பவிஷ், நாகதுர்கா, ரம்யா, சௌந்தர்யா, கதிர், அஸ்வத் மற்றும் பல நடிப்பில் வெளிவந்துள்ள படம் லவ் ஓ லவ்.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்குனர் & எழுத்தாளர் : மகேஷ் ராஜேந்திரன்
தயாரிப்பாளர்கள் : ஜி.தனஞ்சயன், தினேஷ் ராஜ், மற்றும் பிரதீப் பார்த்திபன்
ஒளிப்பதிவு : பி.ஜி. முத்தையா
இசை : ஃபாக்ஸ்ன் – முத்தையா கோபாலரத்தினம்
மக்கள் தொடர்பு : ரேகா
காதலில் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்ற வழக்கமான சினிமா பார்வையை தலைகீழாக மாற்றி, ஒரு ஆணின் மனநிலையையும், உறவுக்காக அவன் செய்யும் தியாகங்களையும் மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம்தான் ‘லவ் ஓ லவ்’.
குடும்பத்தை மட்டுமே உலகமாக நினைத்து, சம்பாதிக்கும் பணம் முழுவதையும் வீட்டிற்காக செலவிடும் இளைஞன். காதல் வந்த பிறகு, தனது வாழ்க்கை எப்படி மாறுகிறது, காதலுக்காக செய்த தியாகங்கள் எப்படி அவனையே பாதிக்கின்றன, ஒரு உறவில் புரிதலும் பொறுப்பும் எவ்வளவு முக்கியம் என்பதை நகைச்சுவை கலந்து சொல்லும் முயற்சிதான் இந்த படம்.
காதலனாக நான்கு ஆண்டுகள் செய்த அனைத்தையும், காதலி நான்கு மாதங்கள் செய்து காட்ட வேண்டும் என்ற சுவாரஸ்யமான நிபந்தனையை மையமாக வைத்து நகரும் இரண்டாம் பாதி, படத்திற்கு தனி பலமாக அமைகிறது.
பவிஷ் தனது முந்தைய படத்தை விட இந்த படத்தில் மிகவும் இயல்பாகவும் நம்பிக்கையுடனும் நடித்திருக்கிறார். காதல், ஏமாற்றம், கோபம், குடும்ப பாசம் என பல உணர்வுகளை மிகைப்படுத்தாமல் வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக உணர்ச்சி வசப்படும் காட்சிகளில் அவரது நடிப்பு கவனிக்க வைக்கிறது.
நாக துர்கா அறிமுக நாயகியாக எளிமையான தோற்றத்தில் வருகிறார். கதாபாத்திரத்திற்கு தேவையான அளவில் நடித்திருந்தாலும், இன்னும் வலுவான திரை ஆளுமை இருந்திருந்தால் கதாபாத்திரம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.
கே.எஸ்.ரவிக்குமார், செல்வராகவன், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த நடிகர்கள் தங்களது கதாபாத்திரங்களுக்கு தேவையான நிறைவை கொடுத்திருக்கிறார்கள்.
பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். வண்ணமயமான காட்சிகள், காதல் பாடல்களின் காட்சியமைப்பு, உணர்ச்சி காட்சிகளில் பயன்படுத்திய ஃபிரேம்கள் அனைத்தும் ரசிக்க வைக்கின்றன.
இசையும் பின்னணி இசையும் காட்சிகளுக்கு தேவையான உணர்வை சேர்க்கிறது. திரைக்கதை சில இடங்களில் மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதியில் வரும் நிபந்தனையைச் சுற்றிய சம்பவங்கள் படத்தை மீண்டும் சுவாரஸ்யமாக்குகின்றன.
மொத்தத்தில், ‘லவ் ஓ லவ்’ வழக்கமான காதல் கதையாக இல்லாமல், ஒரு உறவில் ஆண்களின் பார்வையையும், பொறுப்பையும் பேச முயற்சிக்கும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம். முழுமையான கமர்ஷியல் அம்சங்களுடன், சிரிப்பும் சிறிய கருத்தும் கலந்த படத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு இது ஏமாற்றம் தராது.
VTV24x7 ரேட்டிங்: ⭐⭐⭐⭐☆ (4/5)

