சசிகலாவுக்கு சிறையில் சலுகையில்லை – டி.டி.வி.தினகரன்

அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று தனது அடையார் இல்லத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், விதியை மீறி பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு எந்த சலுகைகளும் அளிக்கப்படவில்லை. மேலும் கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா ஷாப்பிங் செய்து விட்டு வந்ததை போல் பொய்யான புகைப்படங்கள் வெளியிடப்படுகின்றன. சிறையில் இருப்பவர்களை தேவையில்லாமல் வம்புக்கு இழுக்கிறார்கள் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.