சிறுநீரகக்கல் நோயிலிருந்து பாதுகாப்பு பெற

சிறுநீரகக்கல் நோய் ஏற்பட்ட பலர் கடுமையான துன்பங்களுக்கும் தாங்க முடியாத வலிகளுக்கும் உள்ளாவதை கேட்டும் பார்த்தும் இருப்போம். அவ்வாறு அந்நோய் வந்தபின் மருத்துவரை அணுகுவதை விட அது வராமல் தடுப்பதே மிகச்சிறந்தது. காரணம் அந்நோய் வருவதற்கு அதிகமாக நாமே காரணமாய் உள்ளோம்.

சிறு நீரகக்கல் உருவாவதை தடுக்க செய்ய வேண்டிய ஒரே வழிமுறைதான் நீர் அருந்துவது. தினமும் குறைந்தது 1 லீட்டர் தண்ணீராவது அடிக்கடி குடித்து வர வேண்டும். அவ்வாறு செய்வதனால் உடல் கழிவுகள் எளிதாக வெளியேற துணைபுரிவதால் சிறுநீரகத்திற்கு அதிக வேலைப்பளு கொடுக்காமல் அதில் உப்புக்கழிவுகள் கட்டிப்படுவதையும் குறைக்கும்.

அதே போல நீர்த்தன்மை அதிகம் கொண்ட பழங்களான இளநீர், திராட்சை, ஆரஞ்சு, தர்ப்பூசணி அதிகம் உட்கொள்வதனாலும் இந்நோய் வராமல் தடுக்கலாம். அதேபோன்று, சிறுநீரகக்கல் நோய் ஏற்பட்டால் அதிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு எவ்வாறான உணவுகளைப் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம். துளசி இலையின் சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து ஆறு நாட்கள் உட்கொண்டால் சிருநீரகக்கல் உடையும்.

மாதுளை பழத்தின் விதையை பிழிந்து 2 கரண்டி கொள்ளு (காணம்) சாருடன் (ஒன்றுக்கு இரண்டு என்ற விகிதாசாரத்தில்) சேர்த்து சாப்பிட்டால் சிறுநீரகக்கல் கரையும். அத்திப்பழத்தை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தாலும், அந்நோயிலிருந்து விடுபடலாம்.