தனுஷ் இயக்கி, நடிக்கும் அடுத்த படம்

நடிகர் தனுஷ், நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பல அவதாரங்களை எடுத்து வெற்றி கண்டவர். இயக்குனர் ஆக வேண்டும் என்ற ஆசையையும் அவருக்கு இருந்தது. ராஜ்கிரணை வைத்து வித்யாசமான கதையை இயக்கி ‘பவர் பாண்டி’ படத்தை எடுத்து,  வெற்றி அடைந்தார். இந்த நிலையில் தனுஷ் அடுத்து ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு புதிய படம் இயக்கப்போவதாக கூறப்படுகிறது. அப்படத்தில் தனுஷே நாயகனாகவும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.