நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி மீது அவரது மனைவி கமிஷனர் அலுவலகத்தில் புகார்

நடிகர் தாடி பாலாஜி மீது அவரது மனைவி நித்யா காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, தினமும் குடித்துவிட்டு வந்து அடிப்பதாக குற்றச்சாட்டியும், மே மாதம் தாடி பாலாஜி அடித்ததில் அவரது மனைவி முதுகில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்த நித்யா, ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.  ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து திருமணம் செய்ததாக குற்றச்சாட்டு, பலபேருடன் தொடர்பு படுத்தி பேசி சித்ரவதை செய்வதாக மனைவி புகார் அளித்துள்ளார்.