கடலை மிட்டாய்க்கு ஜீ.எஸ்.டி வரி விதிக்கப்பட்டதை கண்டித்து கோவில்பட்டியில் 6ஆம் தேதி ஆர்ப்பாட்டம் – விக்கிரமராஜா

கோவில்பட்டியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில் தங்களது அமைப்பு தொடர்ந்து ஜீ.எஸ்.டி.வரிவிதிப்பினை எதிர்த்து வருகிறோம், மத்திய,மாநில அரசுகள் எங்களிடம் பேசியும் கூட இன்னும் முடிவு சொல்லவில்லை, குஜராத் மாநிலம் சுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜவுளி வணிகர்களை அங்குள்ள பாரதிய ஜனதா அரசு அடித்து விரட்டியுள்ளதை கண்டிக்கிறோம்,கடலை மிட்டாயை கண்டுபிடித்து உருவாக்கிய பகுதி கோவில்பட்டி பகுதி, இன்றைக்கு கடலைமிட்டாய்க்கு 18சதவீதம் ஜீ.எஸ்.டி வரி விதிக்கப்பட்டு, அந்நிய நாட்டு கம்பெனிகளுடன் ஒப்பிடுகையில் இங்குள்ள தொழிலாளர்கள் முழுமையாக தொழிலை விட்டு விலக வேண்டிய சூழ்நிலை உள்ளது, எனவே இதனை கண்டித்து முதற்கட்டமாக வரும் 6ஆம்தேதி கடைகள் அடைக்கப்பட்டு இத்தொழிலை நம்பியுள்ள 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் கோவில்பட்டி நடைபெறுகிறது.

வரும் 7ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் நிதியமைச்சர் கூட்டத்தில் வலியுறுத்த உள்ளோம், அதன் பிறகும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், விரைவில் திருச்சி நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்து ஆலோசிக்கப்பட்டு தென்மாநிலங்களில் உள்ள வணிகர்களை  ஒருங்கிணைத்து மாபெரும் போராட்டம் நடத்துவதற்கு திட்டுமிட்டுள்ளதாகவும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஜீ.எஸ்.டியால் வணிகர்களுக்கு எவ்வித பாதிப்பு இல்லை என்று கூறியுள்ளார். கோவில்பட்டியில் வணிகவரிதுறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் வணிகர்களிடம் கணக்கினை முடித்து தருவதாக குறிப்பிட்ட தொகையை லஞ்சமாக வசூலித்து வருவதாக தெரியவருகிறது.

ஜி.எஸ்.டி வரியினால் லஞ்ச லாவண்யா வாரது என்று மத்தியரசு தெரிவித்துள்ள நிலையில் இது போன்ற செயல்களில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் , தீப்பெட்டி மற்றும் பட்டாசு மீது விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும் என்றார்.  பேட்டியின் போது, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம், செயலர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் பாஸ்கரன், உறுப்பினர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.