ஜீ.எஸ்.டி வரி விதிப்புக்கு எதிர்ப்பு கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலைகள் மூடல்

 

இந்திய அளவில் தீப்பெட்டி உற்பத்தியில் 85சதவீதம் அளவு தமிழகத்தில் தான் உற்பத்தி செய்யபடுகிறது. தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விருதுநகர்,சிவகாசி, நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் தீப்பெட்டி தொழில் நடைபெற்று வருகிறது. 300க்கும் மேற்பட்ட பகுதி நேர இயந்திர தீப்பெட்டி ஆலைகளும், 20க்கும் மேற்பட்ட முழு நேர இயந்திர தீப்பெட்டி ஆலைகளும்,  இயங்கி வருகிறது. ஏற்கனவே மூலப்பொருள்களின் விலை உயர்வு, சிறு தொழில் பட்டியலில் இருந்து நீக்கம் போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டு வந்த தீப்பெட்டி தொழிலுக்கு மற்றொரு பிரச்சினை மத்தியரசு தற்போது விதித்துள்ள 18% வரி ஜீ.எஸ்.டி வரி விதிப்பு உருவெடுத்துள்ளது.

ஜீ.எஸ்.டி வரியை குறைக்க வேண்டும், பகுதி மற்றும் முழுநேர இயந்திர தீப்பெட்டி தொழிலுக்கான வரி விதிப்பில் வித்தியசம் இருக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி இன்று முதல் தமிழகம் முழுவதும் தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் காலவரையற்ற போராட்டத்தினை தொடங்கியுள்ளனர். இதனால் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் உள்ள கோவில்பட்டி, கயததார், விளாத்திகுளம்,கழுகுமலை, கடம்பூர், எட்டயபுரம், இளையரசனேந்தல், வானரமுட்டி பகுதியில் உள்ள தீப்பெட்டி ஆலைகள் இன்று முதல் வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக 5லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்ததுள்ளனர். மேலும் தினமு; 10 கோடி ரூபாய் மதிப்பிலான தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இது தவிர வெளி மாநில ஆர்டர்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் 100கோடி ரூபாய் மதிப்பிலான பண்டல்கள் தேக்கமடைந்துள்ளன.