பர்த்மார்க் விமர்சனம்

ஸ்ரீராம் சிவராமன் விக்ரம் ஸ்ரீதரன் தயாரிப்பில், விக்ரம் ஸ்ரீதரன் இயக்கத்தில் ஷபீர், மிர்னா, டீப்தி, இந்திரஜித், பொற்கொடி, பி ஆர் வரலட்சுமி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பர்த் மார்க்.

இராணுவ வீரராக இருந்த ஷபீர் மிர்னாவை திருமணம் செய்து கொள்கிறார். மனைவி மிர்னா 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் சமயத்தில், இயற்கையான முறையில் சுகப்பிரசவத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக ஒரு கேரளா அருகேயுள்ள ஒரு மலை கிராமத்திற்கு அழைத்துச் செல்கிறார்.

 பெரிதான சாலை வசதியோ, மற்ற வசதிகளோ எதுவும் இல்லாத அந்த கிராமத்தில் சுகப்பிரசவம் அடைவதற்காக பலவிதமான உடற்பயிற்சியை மிர்னாவிற்கு சொல்லிக் கொடுத்து செய்ய சொல்கின்றனர்.

அதை செய்வதற்கு மிர்னாவிற்கு கடினமாக இருந்தாலும், தொடர்ந்து பயிற்சி பெற்று குழந்தையை பெற்றெடுக்கும் மாதம் வரும் சமயத்தில், அந்த குழந்தையை கொல்ல நினைக்கிறார் கணவர் ஷபீர்.

அந்த குழந்தையை ஷபீர் ஏன்  கொல்ல நினைக்கிறார்? அதற்கான காரணம் என்ன? சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்ததா? இல்லையா? என்பதே பர்த் மார்க் படத்தின்  மீதிக் கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு : ஸ்ரீராம் சிவராமன், விக்ரம் ஸ்ரீதரன்

ஒளிப்பதிவு : உதய் தங்கவேல் 

இசை : விஷால் சந்திரசேகர்

படத்தொகுப்பு : இனியவன் பாண்டியன்

மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா ரேகா டி ஒன்