ரணம் அறம் தவறேல் விமர்சனம்

மிதுன் மித்ரா ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில், மது நாகராஜன் தயாரிப்பில், ஷெரீப் இயக்கத்தில், வைபவ், நந்திதா ஸ்வேதா, தன்யா ஹோப், சரஸ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி, ப்ரனீதி, டார்லிங் மதன் ஆகியோர் நடிப்பில் உருவாகிருக்கும் படம் “ரணம் அறம் தவறேல்”.

முகம் அடையாளம் தெரியாத அளவிற்கு சிதைந்த நிலையில் இருக்கும் உடலை வைத்து, அவர்களின் முகத்தை வரைபடமாக வரையும் திறமை உள்ள நாயகன் வைபவ்.

காவல்துறையினரால் கண்டு முடிக்க முடியாத வழக்குகளுக்கு குற்ற பின்னணி  எழுதி கொடுக்கும் வேலையை செய்து வருகிறார். 

இந்த சூழ்நிலையில் அட்டை பெட்டிகளில் கைகள், கால்கள், உடம்பு என உடலின் பாகங்கள் கருகிய நிலையில் சென்னையில் ஆங்காங்கே கண்டெடுக்கப்படுகின்றன. இறந்தவர் யார்? என்று தெரியாமல் திணறும் காவல்துறைக்கு வைபவ் உதவி செய்கிறார். 

விசாரணை துவங்குகிறது. உடலின் பாகங்கள் வேறு வேறு உடலில் இருந்து எடுக்கப்பட்டது என்று அறிந்தவுடன் போலீஸூக்கு கூடுதல் அதிர்ச்சி. இதனைத் தொடர்ந்து வைபவ் இந்த வழக்கிற்கு உதவி புரிகிறார்.

வழக்கை தொடர்ந்து விசாரித்து வந்த இன்ஸ்பெக்டர் ஒருநாள் மாயமாகி விடுகிறார். இதையடுத்து வழக்கை விசாரிக்க வருகிறார் இன்ஸ்பெக்டர் தன்யா ஹோப்.

அவருக்கும் வைபவ் உதவிகளை செய்வதோடு, இந்த மர்ம கொலைக்கான காரணம் யார்? அதற்கான பின்னணியையும், கொலையாளியையும் கண்டுபிடித்து விடுகிறார் வைபவ். அவர் எப்படி கண்டுபிடித்தார்? எதற்காக இந்த கொலைகள் நடந்தது என்பதே ரணம் அறம் தவறேல் படத்தோட மீதி கதை

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு : மிதுன் மித்ரா ப்ரொடக்‌ஷன்ஸ்

இயக்கம் : ஷெரீப்

ஒளிப்பதிவு : பாலாஜி கே ராஜா

இசை : அரோல் கரோலி

மக்கள் தொடர்பு : சதீஷ்குமார்