ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ‘காளிதாஸ் 2’

ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட விழாவான 28-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் (SIFF 2026) திரையிடப்பட்ட ஏழு இந்திய திரைப்படங்களில் ஒன்றாக ‘காளிதாஸ் 2’ தேர்வாகியுள்ளது. தென்னிந்தியாவில் இருந்து இடம்பெற்ற ஒரே திரைப்படம் இதுவாகும்.

ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத், அஜய் கார்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம், திரையரங்குகளில் பாராட்டைப் பெற்றதுடன், தற்போது சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்று தமிழ்ச் சினிமாவுக்கு மேலும் ஒரு பெருமையைச் சேர்த்துள்ளது.