துருவ் விக்ரம் நடிக்கும் ‘#DV4’ படத்தின் பூஜை கோலாகலம்

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்கும் துருவ் விக்ரமின் நான்காவது திரைப்படமான #DV4 (#MythriTamil04) படத்தின் தொடக்க விழா சென்னை அலுவலகத்தில் பூஜையுடன் நடைபெற்றது.

பிருத்வி பாண்டியராஜன், சாய் தீனா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படம், விக்கி ஒளிப்பதிவு மற்றும் தேசிய விருது பெற்ற விக்ரம் மோர் ஆக்சன் அமைப்பில் உருவாகிறது. ‘பைசன்’ வெற்றிக்குப் பிறகு துருவ் விக்ரம் முழுமையான மாஸ் தோற்றத்தில் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு ரசிகர்களிடையே ஏற்கனவே அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.