ராம் ரஹீமுக்கு 10 வருட சிறை தண்டனை

பாலியல் வன்கொடுமை வழக்கில் மதகுரு ராம் ரஹீம் சிங் கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி குற்றவாளி என அறிவிக்கப்பட்டு ஹரியானா ரோதக் சோனாரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட மதகுருவுக்கு இன்று பிற்பகல் இறுதித்தீர்ப்பு வழங்கப்படும் என கூறப்பட்டது.  இந்த வழக்கின் இன்றைய விசாரணையின் போது, ராம் ரஹீம்முக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என்று சிபிஐ கூறியது. ராம் ரஹீம், தனக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என நீதிபதியின் முன் கதறி அழுதார். இருப்பினும் நீதிபதி அவருக்கு 10 வருட சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.  தீர்ப்பு அறிவித்த சில நொடிகளிலேயே ராம் ரஹீம் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.