ZEE5 KidZ-ல் புதிய புராண அனிமேஷன் தொடர் ‘Shivlok Ke Kundakka Mandakka’ அறிமுகம்

குழந்தைகளுக்கான பாதுகாப்பான மற்றும் தரமான பொழுதுபோக்கு உள்ளடக்கங்களை வழங்கி வரும் KidZ on ZEE5, தனது புதிய புராண அனிமேஷன் தொடரான ‘Shivlok Ke Kundakka Mandakka’ (SKM)-வை அறிமுகப்படுத்தியுள்ளது.

பிரபல எழுத்தாளர் ஆனந்த் நீலகண்டன் எழுதிய The Very, Extremely, Most Naughty Asura Tales for Kids என்ற குழந்தைகள் நூலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் தொடர், குறும்புத்தனமான அசுர இரட்டையர்களான குண்டக்கா மற்றும் மண்டக்கா ஆகியோரின் சாகசங்களை மையமாகக் கொண்டது. நகைச்சுவை, அதிரடி மற்றும் இந்திய புராணங்களின் சுவாரஸ்யமான அம்சங்களை இணைத்து, குழந்தைகளுக்கும் குடும்பங்களுக்கும் புதிய அனுபவத்தை வழங்குகிறது.

ஜூலை 17 முதல் வெளியாகும் இந்தத் தொடர், ராமாயணம் மற்றும் மகாபாரதத்தைத் தாண்டிய இந்திய புராண உலகின் புதிய கதாபாத்திரங்களையும், மாயாஜால சாகசங்களையும் அறிமுகப்படுத்துகிறது. தைரியம், நட்பு, கருணை மற்றும் சரியான முடிவுகளே உண்மையான ஹீரோவை உருவாக்குகின்றன என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடர் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், வங்காளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளில் வெளியாகிறது.

இந்த அறிமுகம் குறித்து KidZ, ZEE5-ன் Business Head சந்தன் கந்தேல்வால், இந்தியாவின் பாரம்பரிய கதைகளை இன்றைய குழந்தைகளுக்குப் புதுமையான முறையில் கொண்டு செல்லும் முயற்சியாக இந்தத் தொடர் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

எழுத்தாளர் ஆனந்த் நீலகண்டன், தனது கதாபாத்திரங்கள் அனிமேஷன் வடிவில் புதிய தலைமுறை குழந்தைகளிடம் செல்வது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்திய புராணங்களை குழந்தைகளுக்கு சுவாரஸ்யமாக அறிமுகப்படுத்தும் முயற்சியை பாராட்டுவதாகவும் கூறினார்.