ஜி.எஸ்.டி முறையை ரஜினி எதிர்க்காதது ஏன்? டி.ராஜேந்தர் கேள்வி

தமிழ் திரையுலகை அழிக்கும் வகையிலான ஜி.எஸ்.டி முறையை நடிகர் கமல் எதிர்க்கும் நிலையில் நடிகர் ரஜினி அமைதியாக இருப்பது ஏன் என்று திரைப்பட இயக்குனர் டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார். ஜி.எஸ்.டி வரியுடன் கேளிக்கை வரியும் வசூலிக்கப்பட்டால் திரையுலகம் அழிந்துவிடும் என்று டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

கேளிக்கை வரியை வாபஸ் வாங்குமாறு தமிழக அரசுக்கு எதிராக மட்டும் போராடினால் போதாது ஜி.எஸ்.டியை அமல்படுத்திய மத்திய அரசுக்கு எதிராகவும் திரையுலகம் போராட வேண்டும் என்றும் ராஜேந்தர் வலியுறுத்தியுள்ளார்.