போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக்க எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை – ஜெ.தீபக்

ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில், எங்களது கருத்தை கேட்டறிந்துவிட்டு ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவிடமாக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். ஜெயலலிதாவின் தாயார் சந்தியா உயில்படி வேதா நிலையம் எனக்கும், சகோதரி தீபாவுக்கும் சொந்தமானது. போயஸ் கார்டன் இல்ல வாரிசுகளான தங்களின் கருத்தை கேட்காமல் நினைவிடமாக்குவது சட்டப்படி தவறு. போயஸ் கார்டன் இல்லத்தை ஜெயலலிதா யாருக்கும் எழுதி வைக்கவில்லை.

போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக்க எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. என்றும் தீபக் தனது கடிதத்தில் கூறியுள்ளார். இதற்கிடையே முதல்வர் பழனிசாமிக்கு தீபக் எழுதியுள்ள கடிதத்தில் தேதி மாற்றப்பட்டுள்ளது. கடிதத்தில் 9ஆம் தேதி என குறிப்பிடப்பட்டுள்ளதை அடிக்கப்பட்டு 16ஆம் தேதி என மாற்றப்பட்டுள்ளது. போயஸ் கார்டன் நினைவிடமாக்கப்படும் என 17ஆம் தேதியான நேற்றுதான் முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில் இதுகுறித்து தீபக்கு முன்கூடியே தெரியுமா என சந்தேகம் எழுந்துள்ளது.