கடந்த வாரம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 2 ஆயிரம் கிராமங்கள் முற்றிலுமாக வெள்ளத்தில் மூழ்கின. இதுவரை வெள்ளத்தால் 86 பேர் இறந்துள்ளனர். 2.2 மில்லியனுக்கு அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய விமானப் படை, ராணுவம், துணை ராணுவம் மற்றும் போலீஸ் படைகள் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளன.
50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் நேபாளம் நாட்டின் அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீராலும் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் சென்ற வாரம் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் விரைவில் மீட்பு பணிகளை தொடங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.