சர்ச்சையை ஏற்படுத்திய டாப்லெஸ் போட்டோ

மாடல் அழகியும் பாடகியுமான சாக்ஷி சோப்ரா தனது டாப்லெஸ் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். 1980-களில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ராமாயணம் தொடரை இயக்கியவர் பிரபல பாலிவுட் இயக்குநர் விது வினோத் சோப்ரா. அவரது சகோதரர் ராமானந்த் சாகரின் கொள்ளுப்பேத்திதான் இந்த சாக்ஷி சோப்ரா. ஏற்கெனவே அரைகுறை ஆடையுடன் கூடிய தன்னுடைய படங்களை பதிவுசெய்து அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தியவர்.

தற்போது தனது டாப்லெஸ் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். மேலும் போட்டோ கேப்ஷனில், மனித உடல் ஓர் அழகான பொருள். ஆண், பெண் இருவருக்குமே இது பொருந்தும். என்னை நீங்கள் எந்தவிதத்தில் இகழ்ச்சியான பெயர் சொல்லி கூப்பிட்டாலும் எனக்குக் கவலை இல்லை. எனக்கு சந்தோஷம் தரக்கூடியதை நான் செய்வேன். நான் இதில் எந்த வகையிலும் வெட்கப்படவில்லை. நீங்களும் வெட்கப்படாமல் நீங்கள் எதை விரும்புகிறீர்களோ, அதை வெளிப்படுத்துங்கள் என்று கூறியுள்ளார்.