சென்னையில் பிளாஸ்டிக் இட்லி விற்பனை

சென்னையில் பல்வேறு இடங்களில் சிறு உணவகங்களில் பிளாஸ்டிக் இட்லி விற்கப்படுவதை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். வழக்கமாக இட்லி ஊற்றும் தட்டில் துணியை மட்டுமே பயன்படுத்துவார்கள். ஆனால் சோதனையில் போது பிளாஸ்டிக் பேப்பரை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. தேனாம்பேட்டை, அண்ணா நகர், கோயம்பேடு உள்ளிட்ட முக்கிய இடங்களில், நடைபெற்ற அதிரடி சோதனையில், பிளாஸ்டிக் பேப்பரை பயன்படுத்திய உணவகங்களுக்கு, அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். மேலும், பிளாஸ்டிக் பேப்பர் பயன்படுத்தினால் இட்லியுடன் பிளாஸ்டிக் கலந்து வாடிக்கையாளர்களின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும், இனி பிளாஸ்டிக் பேப்பரை பயன்படுத்தக் கூடாது என்றும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.