இன்றைய செய்திகள்

இரு மதத்தினர் இடையே கலவரத்தை தூண்டும் வகையில் அறிக்கை : பாரதிய ஜனதா தேசிய செயலர் எச்.ராஜா மீது வழக்கு பதிவு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

தீபாவளியையொட்டி இலங்கை சிறையில் உள்ள 42 மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு ஒப்புதல்.

ஐம்மு – காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு : ஹிஜ்புல்-முஜாஹிதீன் அமைப்பு தீவிரவாதி சுட்டுக் கொலை.

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் 11 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு: குஜராத் உயர்நீதிமன்றம்.

மாசு ஏற்படும் என்பதால் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த மாதம் இறுதி வரை பட்டாசு விற்க, வெடிக்க உச்சநீதிமன்றம் தடை விதிப்பு.

18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கு நவம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைப்பு – சென்னை உயர் நீதிமன்றம்.

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவிடமாக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்.

ஆளுநராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துடன் தமிழகஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்திப்பு.

செல்லூர் ராஜூ ஸ்லீப்பர் செல் இல்லை ஸ்லீப்பர் செல்களின் பெயர்களை வெளிப்படையாக நான் எப்படி கூற முடியும் ? : டிடிவி.தினகரன்.

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் அனைத்து தரப்பினரும் 23ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற உத்தரவு.

உள்ளாட்சித்தேர்தல் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கு: 4வாரத்திற்குள் மாநில தேர்தல் ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு – உயர் நீதிமன்றம்.

நடராஜனுக்கு நடந்த உடலுறுப்பு சிகிச்சை குறித்து விசாரணை நடத்தினால் நடத்தட்டும் – டிடிவி தினகரன்.

டெல்லியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சந்திப்பு.

ம.தினகரன் கூறியது போல் நான் ஸ்லீப்பர் செல் இல்லை சசிகலாவை பற்றி நான் கூறியது தவறாக பெரிதாக்கப்பட்டது : அமைச்சர் செல்லூர் ராஜூ.

சேகர் ரெட்டி வழக்கில் அக்.25க்குள் அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.

மத்திய அரசுடன் இணைந்து கீழடியில் அகழாய்வு பணி தொடரும் – அமைச்சர் பாண்டியராஜன்.

வாக்கி டாக்கி முறைகேடு: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் விசாரிக்கக்கோரி தலைமை & உள்துறை செயலரிடம் திமுக சார்பில் ஜெ.அன்பழகன் மனு.

லாரி உரிமையாளர்கள் போராட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு ஆதரவு : விக்கிரமராஜா.

சினிமா டிக்கெட் விலை உயர்ந்ததால் 10% கேளிக்கை வரி காரணமாக திரைத்துறைக்கு எந்த பாதிப்பும் இல்லை.கேளிக்கை வரியை குறைக்கவோ, ரத்து செய்யவோ தற்போது எந்த திட்டமும் இல்லை : கடம்பூர் ராஜூ.

சிவாஜி சிலையிலிருந்து அகற்றிய கருணாநிதி பெயரை மீண்டும் இடம்பெற செய்வதற்கு வாய்ப்பே இல்லை : அமைச்சர் கடம்பூர் ராஜூ.

புதுச்சேரியில் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு ரூ.454 கோடி கடனுதவி வழங்க பிரான்சுடன் ஒப்பந்தம்.

சேகர்ரெட்டி உள்பட 5 பேருக்கு பின் யார் யார் கைது செய்யப்பட்டனர் ? – உயர்நீதிமன்றம்

பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 8.33% போனஸ் வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு.

டெங்குவால் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு கோரி உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு விரைவில் விசாரிக்கபப்டும் என தகவல்.

ஹரியானாவில் குடியிருப்பு பகுதிக்குள் புதிய இறைச்சிக் கடைகளை திறக்க மாநில அரசு தடை.

வீட்டுவசதி வாரியம், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய ஊழியர்களுக்கு 10% போனஸ்.

26 கோடி இஸ்லாமிய மக்கள் பாதிக்கும் வகையில் ஹஜ் மானியத்தை ரத்து செய்ய அரசு குழு அமைத்துள்ளது.பல தலைமுறைகளாக ஹஜ் மானியம் வழங்குவதை ஏன் ரத்து செய்கின்றனர்? : ஹஜ் கமிட்டி துணைத்தலைவர் அபுபக்கர்.

தீபாவளி போனஸுடன் 11.67% கருணைத்தொகையாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு.

சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டது உறுதியானால் சஸ்பெண்ட் – கல்லூரி முதலமைச்சர்.

ஜம்மு- காஷ்மீர்: பாரமுல்லா அருகே லடோராவில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

பனாமா விவகாரம்: சிறப்பு விசாரணை குழு அமைக்க உத்தரவிட மறுப்பு மனு தள்ளுபடி – உச்ச நீதிமன்றம்.

சேலம் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பலனின்றி சிவசக்திவேல் என்ற 10வயது சிறுவன் உயிரிழப்பு.

கேளிக்கை வரியால் சினிமா தொழில் முடங்கிப்போகும் நிலை வந்துவிடக்கூடாது.

சென்னை சூளைமேடு காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக திருநங்கை பிரித்திகாயாசினி பொறுப்பேற்பு.

2017ஆம் ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு ரிச்சர்ட் ஹெச்.தாலருக்கு அறிவிப்பு.

காஞ்சிபுரம் : மதுராந்தகம் காந்திநகரில் காய்ச்சலுக்கு 3 வயது சிறுவன் விஷ்ணு, அம்புரோஸ் (55) ஆகியோர் உயிரிழப்பு.

பரோலிலுள்ள பேரறிவாளனுக்கு அரசியல் தலைவர்களை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.சசிகலா பரோலுக்கு விதிக்கப்பட்ட விதிகள் ஆச்சரியம் அளிக்கிறது : கருணாஸ் எம்எல்ஏ

பல வங்கிக்கணக்கு இருப்பதாக சிபிஐ குற்றம்சாட்டிய நிலையில் ஒரே ஒரு வங்கிக்கணக்கு உள்ளதாக கார்த்தி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் ஒப்புதல்.

மகள் கல்வி தொடர்பாக அக்.19 முதல் நவ.13ஆம் தேதி வரை இங்கிலாந்து செல்ல அனுமதி தர உச்சநீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் கோரிக்கை.

விவசாய நலன் பாதிக்கப்படாத வகையில் தான் கெயில் திட்டங்களை கொண்டு வரவேண்டும் – முக.ஸ்டாலின்.

கண்ணூரில் கம்யூனிஸ்ட் பேரணியில் பா.ஜ.க. குண்டு வீசி தாக்குதல் நடத்தியத்திற்கு ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம்.

முதல்வர் பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்கக்கோரி வழக்கறிஞர் புகழேந்தி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.

சென்னை தலைமைச்செயலகத்தில் காசநோய் இல்லாத சென்னை திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி.

அக்.11இல் 7ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

இந்த ஆட்சியே டெங்கு ஆட்சி என அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு மு..ஸ்டாலின் பதில்.