அல்-கொய்தா இயக்கத்துடன் தொடர்புடைய தீவிரவாதி ஒருவனை டெல்லி போலீசார் இன்று காலை கைது செய்துள்ளனர். ரசா உல் அஹமது எனும் அந்த தீவிரவாதி நேபாலுக்கு தப்பி செல்ல முயலும் போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளான். ரசா உல் அஹமது, அல்-கொய்தா இயக்கத்துடன் தொடர்புடைய அன்சர் பெங்கால் எனும் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவனாவான். இந்தியாவில் நடைபெறும் கள்ள ரூபாய் நோட்டு மோசடியில் ரசாவுக்கு முக்கிய பங்கு உண்டு. கைதுக்கு பின்னர் இவனை மேற்கு வங்க போலீசாரிடம் டெல்லி போலீசார் ஒப்படைத்துள்ளனர். இவன் மீது அங்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த வாரம் உ.பி-யில் அன்சர் பெங்கால் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய நபர் ஒருவரை போலீசார் கைது செய்திருந்தனர். இவர்களை போல் மேலும் பலர் போலி ஆவணங்கள் மூலம் இந்தியாவிற்குள் ஊடுருவி இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்