ஜீவ சமாதி அடைய இடம் கேட்டு கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுக்கை

கோவில்பட்டி பகுதியில் உள்ள அரசு அலுவலங்களில் லஞ்சம், லாவண்யங்கள் தொடர்ந்து நடைபெற்ற வருவதாகவும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வழங்கப்பட்ட இடங்கள், கோவில் நிலங்கள் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவதாகவும், இது குறித்து புகார் அளித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், பணியாளர்கள் இல்லை என்றும்,இது போன்ற பல்வேறு குறைபாடுகள் குறித்து புகார் அளித்தலோ அல்லது பொது மக்கள் மனு அளித்தலோ அரசு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், செயல்படமால் இருக்கும் அரசு அதிகாரிகளையும், தமிழக அரசினை கண்டித்தும் அகில பாரத இந்து மகாசபா சார்பில் ஜீவ சமாதி அடைய இடம் வழங்க கோரி அந்த அமைப்பினர் கோட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அலுவலகத்திற்கு உள்ளே நுழைய முயன்ற போது போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.இதனை தொடர்ந்து 5நிர்வாகிகள் மட்டும் கோட்டாட்சியர் அலுவலகத்திற்குள் சென்று தங்களது மனுவினை அளித்தனர்.இதில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சேகர், அகில பாரத இந்து மகா சபா மாநில பொது செயலாளர் சுப்புராஜ், முருகேசன், தூத்துக்குடி மாவட்ட தலைவர் பரமசிவன், தேமுதிக நிர்வாகி கணேசன், தமிழக வாழ்வுரிமை கட்சி ஒன்றிய செயலாளர் கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.