இந்திய மருத்துவ கவுன்சில், நீட் அவசர சட்டம் குறித்து எதிர்ப்பு

வழக்கறிஞர் நளினி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில், தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு காலதாமதம் செய்வதாக நேற்று மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீது இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் ஏன் காலதாமதம் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழக அரசு சார்பில் நீட் தொடர்பாக அவச சட்டமுன்வடிவு சட்டத்துக்கு மத்திய அரசு ஓப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது

அப்போது நீட் விவகாரத்தில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கூடாது என்றும், நீட் விவகாரத்தில் தமிழக அரசு முறையாக பின் பற்றவில்லை என்றும், மருத்துவ கவுன்சில் சார்பில் உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் தமிழக அரசுக்கு மட்டும் ஏன் நீட் தொடர்பாக சலுகைகள் வழங்கப்படுகிறது . நீட் அவசர சட்டமுன்வடிவு தொடர்பாக மத்திய அரசு வழக்கறிஞர் இன்று மதியம் 2 மணியளவில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.