‘ஜக்கா ஜசோஸ்’ படத்தில் ரன்பீர் கபூருடன் நடித்த நடிகையான பிடிஷா பெஸ்பரூபா அஸ்ஸாம் மாநிலம் குர்கானில் உள்ள தனது வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவருக்கு கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் கணவர் குடும்பத்திற்கும் நடிகைக்கும் பிரச்னை இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பிடிஷா பெஸ்பரூபாவின் ஃபேஸ்புக் பக்கத்தையும், செல்ஃபோனையும் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது கணவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.