டெல்லி உயர்நீதிமன்றம் மதுகோடா தண்டனைக்கு இடைக்காலத்தடை விதித்துள்ளது

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தனியார் நிறுவனங்களுக்கு முறைகேடாக நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இது தொடர்பான வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. இதில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா, மத்திய நிலக்கரித்துறை முன்னாள் செயலர் எச்.சி.குப்தா ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இறுதி கட்ட விசாரணைக்கு பிறகு, ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் மதுகோடா உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது.

அதனையடுத்து இரு தினங்களுக்கு பிறகு டிசம்பர் 16ஆம் தேதி  மதுகோடாவுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 25 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.  இந்த நிலையில் வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதன்படி, இன்று மதுகோடாவின் சிறைத்தண்டனைக்கு நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது. மேலும், அவர் செலுத்த வேண்டிய அபாரதத்தொகைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம்   ஜார்க்கண்ட் மாநிலத்தில் தனியார் நிறுவனங்களுக்கு முறைகேடாக நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இது தொடர்பான வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. இதில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா, மத்திய நிலக்கரித்துறை முன்னாள் செயலர் எச்.சி.குப்தா ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இறுதி கட்ட விசாரணைக்கு பிறகு, ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் மதுகோடா உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது.

அதனையடுத்து இரு தினங்களுக்கு பிறகு டிசம்பர் 16ம் தேதி  மதுகோடாவுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 25 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.  இந்த நிலையில் வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதன்படி, இன்று மதுகோடாவின் சிறைத்தண்டனைக்கு நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது. மேலும், அவர் செலுத்த வேண்டிய அபாரதத்தொகைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.