‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்

ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘நாச்சியார்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசரில் ஜோதிகா பேசிய வசனம் சர்ச்சையை ஏற்படுத்தியது.  இதற்கிடையே, தெலுங்கில் சூப்பர் ஹிட்டான, ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை தமிழில் ரீமேக் செய்யும் வேலைகளில் பரபரப்பாக இருக்கிறார் இயக்குநர் பாலா. இதில், நடிகர் விக்ரம் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகமாகிறார். இப்படத்தின் ஆரம்ப கட்டப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

இந்நிலையில், பாலா இயக்கும் ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், நாயகியாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ‘விக்ரம் வேதா’ படத்தின் ஹிட்டுக்குப் பிறகு ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு உள்ளதால், அவரை நடிக்க வைக்க பாலா விரும்புவதாக தெரிகிறது.   இந்தப் படத்தில் அரவிந்த்சாமி, விஷால், ஆர்யா, அதர்வா, ராணா, அனுஷ்கா போன்ற நட்சத்திரங்களையும் நடிக்க வைக்கும் திட்டத்தில் இருக்கிறார் இயக்குநர் பாலா.