பொது செயலாளர் ஆனதை ஏற்றுக்கொள்ள முடியும்… முதல்வராவதை ஏற்றுக்கொள்ள முடியாது…” டி.ராஜேந்தர்

முன்னாள் முதல்வர் அம்மா ஜெயலலிதாவுக்காக மட்டுமே மக்கள் ஓட்டு போட்டார்கள். பன்னீருக்காகவும் கூட ஓட்டு போடவில்லை. மர்ம நாவல் போல் சென்று கொண்டிருக்கிறது அதிமுக தலைமையின் செயல்பாடுகள். திமுகவே பன்னீருக்கு ஆதரவு கொடுத்தபோதும், ஏன் பன்னீரை நீக்கினீர்கள். இதை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது, என ராஜேந்தர், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறினார். சமூக வளைதளங்களிலும், மீடியாக்களிலும் எவ்வளவுதான் வாரி தூற்றினாலும், எதை பற்றியும் கவலைப்படாமல் செயல்படுகிறார் சசிகலா” என ராஜேந்தர் குற்றஞ்சாட்டினார். மேலும், டாக்டர் ராமதாஸ், ஸ்டாலின் போன்றோர் கருத்துகளை வரவேற்பதாகவும், மதிப்பதாகவும் அவர் தெரிவித்தார். “எதற்காக இவ்வளவு அவசரம் காட்டினார்கள் என, அவர்கள் தான் விளக்க வேண்டும். அடுத்த வாரம் தீர்ப்பு வரும்வரை காத்திருக்காதது ஏன். சசிகலா மீது இத்தனை வழக்குகள் வைத்து கொண்டு முதல்வராவது, தமிழகம் செய்த பாவமா..? இந்தியாவே செய்த பாவமா…?” என கேள்வி எழுப்பினார். “காமராஜர், எம்ஜிஆர் வீடுகளை போன்று எனக்கு யாருமே சொந்தமில்லை என்று சொன்ன ஜெயலலிதா இல்லதை நினைவிடம் ஆக்காமல், இவர்கள் வாழ என்ன உரிமை இருக்கிறது” என டி.ராஜேந்தர் கேள்விகளை எழுப்பினார். எந்த உரிமையில் சசிகலா தற்போது, போயஸ் கார்ட்னில் இருகிறார் என யாரவாது கேள்வி எழுப்புனீர்களா…? நான் எழுப்புகிறேன்” என தைரியமாக, ஆவேசமாக பேசினார்.