சத்ரியன் – சினிமா விமர்சனம்

தாதா சரத் லோகிதஸ்வா திருச்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுடன், அமைச்சர் போஸ்டர் நந்தகுமாரின் ஆதரவுடன் திருச்சியை ஆட்டிப்படைக்கிறார். என்னதான் ஊரையே ஆட்டிப்படைத்தாலும், வீட்டில் மகள் மஞ்சிமா மோகன், மகன் சவுந்தர்ராஜனுக்கு அன்பான தந்தையாக வந்து செல்கிறார். அப்பா ஊரையே ஆட்டிப்படைக்கும் ரவுடி, ஆனால் மகன் சவுந்தர்ராஜனோ ஒரு அப்பாவி. ஒரு கட்டத்தில் சரத் லோகிதஸ்வாவின் வளர்ச்சி பிடிக்காத அமைச்சர் நந்தகுமார், அவரை கொல்ல திட்டம் தீட்டுகிறார்.

பின்னர் திருச்சியின் மற்றொரு ரவுடியான அருள் தாஸ் மூலமாக சரத் லோகிதஸ்வாவை கொன்று விடுகிறார். இதனால் சரத் லோகிதஸ்வா இடத்திற்கு அவருக்கு நெருக்கமான விஜய் முருகன் வருகிறார். விஜய் முருகனின் கீழ் அவரின் நம்பிக்கையான ரவுடியாக நாயகன் விக்ரம் பிரபு வருகிறார். சரத் லோகிதஸ்வாவை இழந்த அவரது குடும்பத்திற்கு எந்த பிரச்சனையும் வராமல் விஜய் முருகன் பார்த்துக் கொள்கிறார். இவ்வாறாக ஒரு நாள் கல்லூரிக்கு சென்ற மஞ்சிமா மோகனை சிலர் தொந்தரவு செய்கின்றனர். இந்த விஷயத்தை மஞ்சிமாவின் அம்மா விஜய் முருகனிடம் கூறுகிறாள். இதையடுத்து மஞ்சிமாவுக்கு பாதுகாப்பாக, விஜய் முருகனின் நம்பிக்கைக்கு பாத்திரமான விக்ரம் பிரபு வருகிறார்.

மறுநாளே மீண்டும் மஞ்சிமாவுக்கு தொந்தரவு வர, அங்கு வரும் விக்ரம் பிரபு அவர்களை தெறிக்க விடுகிறார். அவரது தைரியத்தை பார்த்து மஞ்சிமாவுக்கு அவர் மீது காதல் வருகிறது. விக்ரம் பிரபு, மஞ்சிமா பின்னாலேயே அனைத்து இடங்களுக்கும் செல்கிறார். இந்நிலையில், ஒருநாள் தனது காதலை விக்ரம் பிரபுவிடம் மஞ்சிமா வெளிப்படுத்த, அவளது காதலுக்கு விக்ரம் பிரபு மறுப்பு தெரிவிக்கிறார். விடாது அவரை தனது வலையில் சிக்க வைக்கும் மஞ்சிமா, ரவுடி வாழ்க்கை வேண்டாம், நிம்மதியாக வேறு வாழக்கை வாழலாம் என அவருக்கு அறிவுரை கூற, மஞ்சிமாவின் அறிவுரையை கேட்டு விக்ரம் பிரபுவும் மஞ்சிமாவை காதலிக்க ஆரம்பிக்கிறார். 

இந்நிலையில், இவர்களது காதல் மஞ்சிமாவின் வீட்டுக்கு தெரிய வந்து, அவர்கள் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். விஜய் முருகனும் விக்ரம் பிரபுவிடம் மஞ்சிமாவை விட்டுவிட்டு வர அறிவுறுத்துகிறார். ஆனால் அவரது பேச்சை கேட்காமல் தனது காதலில் துடிப்புடன் இருக்கிறார் விக்ரம் பிரபு. தனது நம்பிக்கைக்கு பாத்திரமானவன் இப்படி துரோகம் செய்துவிட்டானே என்று விக்ரம் பிரபுவை கொல்ல விஜய் முருகன் திட்டமிடுகிறார். இதுஒருபுறம் இருக்க அருள்தாஸின் ஆள் ஒருவரை கொன்றதற்காக, விக்ரம் பிரபுவை பழிவாங்க அருள் தாஸின் ஆட்கள் சுற்றித் திரிகின்றனர். இதையடுத்து இந்த பிரச்சனைகளில் இருந்து விக்ரம் பிரபு மீண்டாரா? மஞ்சிமா மோகனுடன் சேர்ந்து நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்தாரா? என்பது படத்தின் மீதிக்கதை.

இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்