சத்தம் இன்றி முத்தம் தா விமர்சனம்

செலிபிரைட் புரொடக்ஷன்ஸ் சார்பில், கார்த்திகேயன்.எஸ் தயாரிப்பில், ராஜ் தேவ் இயக்கத்தில், ஸ்ரீகாந்த், பிரியங்கா திம்மேஷ், ஹரிஷ் பெராடி, வியான், நிஹாரிகா ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் சத்தம் இன்றி முத்தம் தா.

படம் ஆரம்பம் ஆகும்போதே நாயகி பிரியங்கா திம்மேஷை கொலை செய்வதற்காக ஒருவர் துரத்துகிறார். அதிலிருந்து தப்பிப்பதற்காக வீட்டிலிருந்து  வெளியே ஓடிச் செல்லும் போது காரில் அடிபட்டு தூக்கி வீசப்படுகிறார். அங்கே வரும் ஸ்ரீகாந்த் அவரை தூக்கிச் சென்று கணவர் என்ற சொல்லி மருத்துவமனையில் சேர்க்கிறார்.

இந்நிலையில் பிரியங்கா பழைய நினைவுகள் அனைத்தையும் எழுந்து விடுகிறார் ஸ்ரீகாந்த் நான்தான் உன் கணவன் என்று சொல்லி அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்.

ஒன்றுமே புரியாமலும் உன் எந்த நினைவும் இல்லாமலும் ஸ்ரீகாந்த் உடன் இருக்கிறார். இப்படி போய்க்கொண்டிருக்கும் வேளையில் பிரியங்கா தாக்க வரும் இருவரை பிரியங்கா கண்முன்னே கொடூரமாக கொலை செய்து விடுகிறார் ஸ்ரீகாந்த். 

இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் பிரியங்காவின் தோழியின் மூலம் ஸ்ரீகாந்த் தன் கணவர் இல்லை என்று தெரிய வருகிறது. இதனால் ஸ்ரீகாந்த் எப்படி இருந்து தப்பித்து செல்ல முயற்சி செய்கிறார். 

இறுதியில் ஸ்ரீகாந்திடமிருந்து தப்பிச் சென்றாரா? இல்லையா? பிரியங்காவின் உண்மையான கணவர் யார்? பிரியங்காவை கொலை செய்ய முயற்சி செய்தது யார்? ஸ்ரீகாந்த் எதற்காக பிரியங்காவை காப்பாற்றி தன் பாதுகாப்பில் வைத்திருந்தார்? என்பதே சத்தம் இன்றி முத்தம் படத்தோட மீதி கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இசை : ஜுபின்

பாடல்கள் : விவேகா

ஒளிப்பதிவு : யுவராஜ்.எம் 

படத்தொகுப்பு : ஜி.மதன்

நடனம் : தினேஷ்

ஸ்டண்ட் :  மிராக்கிள் மைக்கேல் 

தயாரிப்பு மேற்பார்வை : ஆனந்த் 

மக்கள் தொடர்பு : மணவை புவன்