அதோமுகம் விமர்சனம்

ரீல் பெட்டி மற்றும் தரிகோ பிலிம் ஒர்க்ஸ் தயாரிப்பில், சுனில் தேவ் இயக்கத்தில், எஸ்.பி சித்தார்த், சைதன்யா பிரதாப், அனந்த் நாக், சரித்திரன், நக்கலைட்ஸ் கவி, வர்கீஸ், பிபின், அருண்பாண்டியன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் அதோ முகம்.

நாயகன் எஸ்.பி.சித்தார்த், தன்னுடைய காதல் மனைவி நாயகி சைதன்யா பிரதாப்புடன் ஊட்டியில் வாழ்ந்து வருகிறார். தன்னுடைய காதல் மனைவிக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்க நினைக்கிறார் அதற்காக அவருடைய செல்போனில் அவருக்கே தெரியாமல் ஒரு ஆப் ஒன்றை இன்ஸ்டால் செய்கிறார். அந்த ஆப் மூலம் அவருடைய நடவடிக்கைகளை ரெக்கார்ட் செய்து அதை வீடியோவாக உருவாக்கி பரிசாக கொடுக்க முடிவு செய்கிறார்.

அதற்காக அவர் இன்ஸ்டால் செய்யும் ஆப் மூலம் மனைவியின் செல் போனை ஹேக் செய்து, அவருடைய நடவடிக்கைகளை பதிவு செய்கிற போது அவரது மனைவி செயல்கள் அதிர்ச்சியை கொடுக்கிறது. இதனால் குழம்பித் தவிக்கும் சித்தார்த் மனைவியை பின்தொடர்கிறார். அவருக்கு அடுத்தடுத்து ஏற்படும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை கொடுக்கிறது.

 தன்னுடைய மனைவியை வைத்து தன்னை சுற்றி செய்யப்பட்டுள்ள சதி வேலைகளை பற்றி தெரிந்து கொள்ளும் சித்தார்த் அந்தப் பிரச்சினையில் இருந்து தண்ணியும் தன்னுடைய மனைவியும் காப்பாற்றிக் கொள்வதற்காக சில நடவடிக்கைகள் ஈடுபடுகிறார்.

அவருடைய ஒவ்வொரு செயலும் ஆபத்துகளை ஏற்படுத்துகிறது. கடைசியில் ஒரு பெரிய பேராபத்தில் சிக்கிக் கொள்கிறார். அதிலிருந்து மீண்டார்களா? இல்லையா? என்பதே அதோமுகம் படத்தோட மீதி கதை.

 

 

 

 

தொழில்நுட்ப கலைஞர்கள் 

இசை : மணிகண்டன் முரளி 

பின்னணி இசை : சரண் ராகவன் 

ஒளிப்பதிவு : அருண் விஜய்குமார்  

கலை இயக்குனர் : சரவணா அபிராமன்

படத்தொகுப்பு: விஷ்ணு விஜயன்

ஒலி வடிவம் : திலக்ஷன்

ஒலி கலவை : டி.உதயகுமார் 

ஒப்பனை: நரசிம்மா, அம்மு பி ராஜ், சுப்ரமணி (அருண் பாண்டியன்) 

பாடல் : சுனில் தேவ்

கலரிஸ்ட் : கே.அருண் சங்கமேஸ்வர்

இணை தயாரிப்பாளர்கள் : அன்டோ சுஜன் டி.பிரான்சிஸ், வெங்கிமணி 

நிர்வாக தயாரிப்பாளர்கள் : எஸ்.கணேஷ்குமார், விக்னேஷ் ரவிச்சந்திரன்

மக்கள் தொடர்பு  : ஆர்.குமரேசன்