சசிகலா உறவினர்களுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை, முப்பது லட்சம் அபராதம்

சசிகலாவின் சகோதரி மகள்தான் சீதளா தேவி, அவரது கணவர் எஸ்.ஆர்.பாஸ்கரன். முன்னாள் ரிசர்வ் வங்கி ஊழியரான பாஸ்கரனும், அவரது மனைவியும் 1988 முதல் 1997 வரை வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.68 கோடி சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ. 1998ல் வழக்குப்பதிவு செய்தது. 1999ல் சிபிஐ கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 2001ல் சாட்சிகள் விசாரணை தொடங்கி 2008ல் நீதிபதி நாகநாதன் தீர்ப்பு வழங்கினார். எஸ்.ஆர்.பாஸ்கரனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் மற்றும் 20 லட்சம் ரூபாய் அபராதம், சீதளாதேவிக்கு 3 ஆண்டு கடுங்காவல் மற்றும் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து இருவரும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த வழக்கில் இன்று 16.11.2017 தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.