தினகரன் ஆதரவாளர் நாஞ்சில்சம்பத் ஜெயாடி.வி.யையும், நமது எம்.ஜி.ஆர். கையகப்படுத்தப்படுவதாக முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், இவ்வாறு அவர்கள் கூறுவது ஆச்சரியமாக உள்ளது. தனியார் சொத்துக்களான ஜெயா டி.வி. மற்றும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழை எப்படி இவர்கள் கையகப்படுத்தமுடியும். இதிலிருந்தே உங்களுக்கு தெரியவில்லையா எங்களது துணை பொதுச்செயலாளர் சொல்லியது போல் இவர்கள் 420 என்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
நான் சவால் விடுகிறேன் துணிச்சல் இருந்தால் ஜெயா டிவி மற்றும் நமது எம்.ஜி.ஆர். அலுவகத்திற்கு வந்து பார்க்கட்டும். தினகரனால் நியமிக்கப்பட்டவர்கள் தங்களது பணிகளை தொடங்கிவிட்டனர். ஆடிட்டர் குருமூர்த்தியின் கட்டுபாட்டில் தான் இந்த அரசு இயங்கிக்கொண்டு இருக்கிறது என்று கூற நாஞ்சில் சம்பத் அப்போது அதற்கான ஆதாரம் இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, தமிழக அமைச்சர்கள் தங்கமணி , வேலுமணி ஆகியோர் குருமூர்த்தியின் இல்லத்தில் ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள் என்ற ஆதாரம் எங்களிடம் உள்ளது என்று கூறினார். மேலும் கூறுகையில் சட்டமன்றத்தின் உரிமை மீட்பு குழு கூட்டம் நிச்சயம் இன்று நடைபெறாது. பெரும்பான்மையை இழந்த இந்த அரசுக்கு அந்த உரிமை இல்லை என்றும் கூறினார்.