ரோமியோ விமர்சனம்

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில், மீரா விஜய் ஆண்டனி தயாரிப்பில், விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, மிர்னாளினி ரவி, யோகி பாபு, விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி, சாரா, ரோஜு, ஷாலினி விஜயகுமார், அத்வைத், ஜெய சம்ரிதா, முரளி ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ரோமியோ.

நாயகன் விஜய் ஆண்டனி தன்னுடைய 35 வயது வரை மலேசியாவில் வேலை செய்து சம்பாதித்து விட்டு சொந்த ஊரான தென்காசிக்கு வருகிறார், அவருடைய பெற்றோரானா இளவரசு, சுதா ஆகியோர் திருமணம் செய்து கொள்ள வலியுறுத்துகிறார்கள். விஜய் ஆண்டனியோ காதலித்து தான் திருமணம் செய்து கொள்வேன் என்று பிடிவாதமாக இருக்கிறார்.

ஐடி நிறுவனத்தில் வேலை செய்வதாக பொய் சொல்லி விட்டு சினிமாவில் நடிக்க சான்ஸ் தேடிக் கொண்டிருக்கிறார் நாயகி மிர்னாளினி ரவி, தாத்தாவின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக ஊருக்கு வரும் மிர்னாளினி ரவியை பார்க்கும் விஜய் ஆண்டனி அவர் மீது காதல் கொள்கிறார் .

மிர்னாளினியின் தந்தை தலைவாசல் விஜய்க்கு பண தேவை இருப்பதால் விஜய் ஆண்டனி உதவி செய்கிறார். பிறகு மிர்னாளினி ரவியின் பெற்றோர் சம்மதத்துடன் 10 வயது வித்தியாசத்துடன் மிர்னாளினி ரவியை திருமணம் செய்து கொள்கிறார் விஜய் ஆண்டனி.

திருமணத்திற்கு பிறகு தான் மிர்னாளினிக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்பதும், சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவுடன் இருப்பதும் விஜய் ஆண்டனிக்கு தெரிய வருகிறது. பிறகு சென்னையில் குடியேறுகின்றனர்.

மிர்னாளினி தன்னுடைய சினிமா நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு ஜாலியாக இருந்து கொண்டும் விஜய் ஆண்டனியை விவாகரத்து செய்ய முடிவு செய்கிறார். விஜய் ஆண்டனியோ மிர்னாளினியை காதலிப்பதால் எல்லாவற்றையும் பொறுத்து கொள்கிறார்.

மிர்னாளினியின் தீவிர ரசிகன் விக்ரம் என்று பெயர் மாற்றி, தொலைபேசியில் பேசி, விஜய் ஆண்டனி மிர்னாளினியை உற்சாகப்படுத்தி அவருடைய லட்சியம் நிறைவேற உதவி செய்கிறார்.

மிர்னாளினியை வைத்து படம் தயாரிக்க முடிவு செய்கிறார் விஜய் ஆண்டனி.

மிர்னாளினியின் கனவை விஜய் ஆண்டனி நிறைவேற்றினாரா? இல்லையா? விஜய் ஆண்டனியின் காதலை மிர்னாளினி ஏற்றுக்கொண்டு சேர்ந்து வாழ்ந்தாரா? இல்லை விவாகரத்துக செய்தாரா? என்பதே ரோமியோ படத்தின் மீதிக்கதை.

தொழில் நுட்ப கலைஞர்கள்

எழுத்து/ இயக்கம் – விநாயக் வைத்தியநாதன்
ஒளிப்பதிவாளர் – ஃபரூக் .ஜே பாஷா
இசையமைப்பாளர் – பரத் தனசேகர்
எடிட்டர் – விஜய் ஆண்டனி
ஆடை வடிவமைப்பாளர் – ஷிமோனா ஸ்டாலின்
கலை இயக்குநர் – எஸ்.கமலநாதன்
மக்கள் தொடர்பு – ரேகா