டியர் விமர்சனம்

Nutmeg புரொடக்ஷன் சார்பில், வரண் த்ரிபுரனெனி, அபிஷேக் ராமி செட்டி, G பிருத்விராஜ் தயாரிப்பில், ரோமியோ பிக்சர்ஸ் வெளியீட்டில், ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், காளி வெங்கட், நந்தினி, தலைவாசல் விஜய், ரோகிணி, இளவரசு, கீதா கைலாசம், ஜே கமலேஷ், அப்துல் லி, மகாலட்சுமி சுதர்சன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் டியர்.

குன்னூரில் அம்மா, அண்ணன் அண்ணி, என கூட்டு குடும்பத்தில் வசித்து வருகிறார் நாயகன் ஜி வி பிரகாஷ். இவருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் திருமணம் செய்து வைக்கிறார்கள்.

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தூங்கும் போது குறட்டை விடும் பழக்கம் இருக்கிறது. அதனை அம்மாவின் சொல் பேச்சு கேட்டு ஐஸ்வர்யா ராஜேஷ் ஜிவி பிரகாஷிடம் மறைத்து விடுகிறார். ஜி வி பிரகாஷ் சிறியதாக சத்தம் கேட்டாலே தூக்கத்திலிருந்து எழுந்து விடும் பழக்கம் உள்ளவர். முதல் இரவு அன்று ஐஸ்வர்யா ராஜேஷ் விடும் குறட்டை ஜீவிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இப்படியே நாட்கள் செல்ல செல்ல குறட்டை பிரச்சனையால் ஜீவி பிரகாஷிற்கு வேலை போகும் நிலை ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷிடமிருந்து இருந்து ஜீவி பிரகாஷ் விவாகரத்து கேட்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் அதற்கு மறுக்க, நீதிமன்றம் அவர்களுக்கு சில காலம் அவகாசம் கொடுக்கிறது. இந்த கால அவகாசத்தில் குறட்டை பிரச்சனை தீர்ந்து இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே டியர் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

எழுத்து இயக்கம் : ஆனந்த் ரவிச்சந்திரன் ஒளிப்பதிவு : ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி இசை : ஜீவி பிரகாஷ் குமார்
எடிட்டர் : லோகேஷ்
தயாரிப்பாளர்கள் : வரண் த்ரிபுரனெனி, அபிஷேக் ராமி செட்டி, G பிருத்விராஜ்
மக்கள் தொடர்பு : யுவராஜ்