கோவில்பட்டி பகுதியில் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்வததை தடுக்க கோரிக்கை

கோவில்பட்டி நகரில் வீரவாஞ்சி நகர், மந்திதோப்பு, கெச்சிலாபுரம், இனாம்மணியாச்சி ஊராட்சிக்குட்பட்ட அத்தைகொண்டான், இந்திரநகர் பகுதிகளில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்து வருவதாகவும், மேலும் தெற்கு கோனார்கோட்டை பகுதியில் உள்ள கல் குவாரியில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், ஏற்கனவே கோவில்பட்டி நகரில் சீரான குடிநீர் விநியோகம் இல்லாத நிலையில், நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது.

கிராமப்புறங்களில் தண்ணீர் எடுத்து விற்பனை செய்யப்படுவதால் நிலத்தடி நீர் குறைவது மட்டுமின்றி விவசாயம் பாதிக்கப்படும் ஆபாயம் உள்ளதால் சட்ட விரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நிலத்தடி நீர் பாதுகாப்பு  இயக்கத்தினர் அதன் ஒருங்கிணைப்பாளர் ராஜா தலைமையில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தவறு செய்தவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்களை திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று நிலத்தடி நீர் பாதுகாப்பு  இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதில் வழக்கறிஞர் கருப்பசாமி,மக்கள் தேசிய தீ கட்சிய மாநிலதுணை பொதுச்செயலாளர் பொன்னுராஜ், தென்மண்டல மாணவரணி நிர்வாகி சங்கிலிபாண்டி, நேதாஜி இரத்ததான கழக நிர்வாகி வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.