சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வீட்டுவசதி துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், வீட்டு உரிமையாளர்கள் மற்றும் வாடகைக்கு இருப்போர் பலன் அடையும் வகையில் இந்த சட்டம் செயல்படுத்தப்படும் என்றார். அதன் படி வீடு மற்றும் கடை வாடகைக்கு விடுவோர் மற்றும் வாடகை செல்வோர் ஆன்லைனில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், புதிதாக ஒரு ஆணையம் அமைக்கப்பட்டு வீடு, கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரார்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். புதிய சட்டம் அமலுக்கு வந்தால், வாடகைக்கு இருப்போரை உடனடியாக காலி செய்யுமாறு உரிமையாளர் வலியுறுத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். அதே போல் வீட்டை காலி செய்ய உரிமையாளர் அளித்துள்ள அவகாசத்திற்கு பிறகு வாடகை தாரரும் குடியிக்க முடியாது என்றும் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.