அடித்தது அதிர்ஷ்டம், பன்னாட்டு நிறுவனங்களுடன் ஜியோ கூட்டணி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் டெலிகாம் பிரிவான ஜியோ அமெரிக்காவின் ஏர்வயர் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து கனெக்டெட் கார் சாதனத்தைத் தனது இந்திய வாடிக்கையாளர்களுக்காக உருவாக்க உள்ளது. இதுமட்டும் இல்லாமல் உலகின் மிகப்பெரிய வன்பொருள் மற்றும் மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்துடனும் ஜியோ இணைந்துள்ளது. எந்த நிறுவனம் அது.. என்ன செய்யப்போகிறது ஜியோ..?
ஜியோ மற்றும் ஏர்வயர் டெக்னாலஜிஸ் இணைப்பு குறித்து ஏர்வயர் வெளியிட்ட அறிக்கையில், ஏர்வயர் நிறுவனத்தின் கனெக்டெட் கார் சாதனத்தை ரிலையன்ஸ் ஜியோ உடன் இணைந்து இந்தியாவில் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது ஏர்வயர். ஜியோவின் டெலிகாம் சேவை அறிமுகம் செய்த 180 நாட்களில் 100 மில்லியன் 4ஜி வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ள ஜியோ தற்போது டெலிகாம் சேவையில் மட்டும் கவனத்தைச் செலுத்தாமல், கனெக்டெட் கார் சாதனத்தைத் தயாரித்து வெளியிடுவதன் அடுத்தத் தலைமுறை டெக்னாலஜி வளர்ச்சிகளில் ஒன்றான ஆட்டோமொபைல் டெலிமேடிக்ஸ் துறையில் கால் பதித்துள்ளது.

இதனை ஏர்வயர் உடன் சேர்ந்து தயாரிப்பதன் மட்டும் அல்லாமல், இதனை இந்திய சந்தையில் விற்பனை செய்வும் பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களுடன் ஜியோ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன் அறிமுகம் கூடிய வரைவில் நடக்கும். மேலும இதன் விலை 2000 ரூபாய் அளவில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்த விபரங்கள் அடுத்த அதன் அறிமுகத்தின் போது கிடைக்கும். உலகளவில் வன்பொருள் மற்றும் மென்பொருள் தயாரிப்பில் முன்னணியாக இருக்கும் சிஸ்கோ நிறுவனத்துடன் புதிய வளர்ச்சி திட்டத்திற்காக ஜியோ இணைந்துள்ளது. சிஸ்கோ உடன் இணைந்து இந்தியாவின் புதிய டெலிகாம் நிறுவனமான ஜியோ, தற்போது தான் வைத்திருக்கும் பன்படங்கு டெராபிட் திறன் கொண்ட தளத்தை முழுமையாக ஐபி சேவை தளமாக மாற்ற திட்டமிட்டுள்ளது.

ஐபி சேவை தளத்தை இந்தியாவின் முதல் முறையாக அறிமுகப்படுத்துவது ஜியோ என்பது குறிப்பிடத்தக்கது. சிஸ்கோ உடன் இணைத்து மேம்படுத்தப்படும் ஜியோ சேவைகளில் இனி இந்தியாவில் யாரும் அளிக்காத அளவில் அதிவேக இண்ட்நெட், மொபைல் வீடியோ, VoLTE சேவைகள், டிஜிட்டல் காமர்ஸ், மீடியா, கிளவுட் மற்றும் பேமெண்ட் சேவைகள் அனைத்தையும் மேம்படுத்தப்பட்ட வகையில் அளிக்க உள்ளது. பைபர் மற்றும் டேட்டா சென்டர் ஜியோ நிறுவனத்திடம் தற்போது 3,00,000 கிலோமீட்டர் தொலைவிலான பைபர் மற்றும் இந்தியாவிலேயே மிகப்பெரிய கிளவுட் டேட்டா சென்டரையும் வைத்துள்ளது. இதன் மூலம் ஐபி சேவை தளத்தைக் கொண்டு வருவது எளிமையான காரணமாகும்.