அரிசி ஒதுக்கீட்டில் ரேஷன் கடைகளில் மாற்றம்

தமிழகத்தில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ரேஷன் அட்டைகளை பொறுத்து அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. அதாவது வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 35 கிலோ அரிசியும், வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு 20 கிலோ அரிசியும் வழங்கப்பட்டு வருகிறது.  இதைத்தொடர்ந்து, கிடங்கு பொறுப்பாளர்களுக்கு  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் ஒரு முக்கிய சுற்றறிக்கையை அனுப்பி வருகிறது. 

அதன்படி, “இந்திய உணவுக்கழகத்தில் இருந்து 70:30 என்ற விகிதத்தில் தான் புழுங்கல் அரிசி மற்றும் பச்சரிசி பெறப்பட்டு வருகிறது. எனவே தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளிலும், அதே விகிதத்தில் அரிசி வழங்கப்பட வேண்டும். அப்போது தான் அரிசி பற்றாக்குறை ஏற்படாது. ஒரு கார்டுக்கு  புழுங்கல் அரிசி மற்றும் பச்சரிசி முறையே 70:30 என்ற விகிதத்தில் தான் வழங்க வேண்டும். அதாவது 20 கிலோ அரிசி என்றால், 14 கிலோ புழுங்கல் அரிசியும், 6 கிலோ பச்சரிசியும் வழங்க வேண்டும். இதை பின்பற்ற தவறும் பட்சத்தில் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.