ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடக்கவிருப்பதை அடுத்து பணம் பட்டுவாடாவை தவிர்க்க அனைத்து வாகனங்களிலும் போலீசார் தீவிர சோதனை செய்து வருகின்றனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின், காலியான ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியினை வெளியிட்டதை தொடர்ந்து அந்த தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் ஆர்.கே.நகரின் 11 இடங்களில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனை நடவடிக்கையில் காவல் ஆணையர் ஜெயராம், இணை ஆணையர் சுதாகர் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
