பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் திமுகவின் தகவல்தொழில்நுட்ப அணி செயலாளராக நியமனம்

திமுகவின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவின் கொள்கைகளையும் செயல்பாடுகளையும் காலத்திற்கேற்ற வகையில், அனைத்து தரப்பு மக்களிடமும் விரைந்து கொண்டு சேர்க்கும் வகையில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி எனும் புதிய துணை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இந்த அணியின் செயலாளராக முனைவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.