பூனம் மகாஜன் – நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு

மதுக்கடைகளை மூட வேண்டும், உள்ளாட்சித் தேர்தலை நடத்திட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக பாஜக சார்பில் கோட்டை நோக்கி பேரணி இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசிய இளைஞரணி செயலாளர் பூனம் மகாஜன் சென்னை போயஸ் தோட்டத்தில் ரஜினிகாந்தை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று பா.ஜ.க.சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.