ஓவியா விவகாரம் விளையாட்டல்ல

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஓவியா தனக்கு மனநல மருத்துவரின் ஆலோசனை தேவை என்று கூறியதால் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். அவர் திரும்ப அழைத்துவரப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஓவியான் மனநிலை சரியில்லை என பிக்பாஸ் போட்டியாளர்கள் பேசி வருகின்றனர். ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைதளங்களிலும் பல்வேறு மீம்ஸ்களும் கருத்துகளும் பரவிவருகின்றன.

இந்நிலையில், ஓவியாவிற்கு ஆதரவாக நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளார். மனநிலை பாதிப்பு என்பது விளையாட்டான விஷயம் அல்ல. வதந்திகளை பரப்புவதை நிறுத்துங்கள் என காட்டமாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சித்தார்த்.