சென்னையின் முன்னணி டிராம்போலின் ஜஸ்ட் ஜம்ப்

ஆரோக்கியமாக வாழ்வதென்பது தூய்மையானவற்றை உண்பதோ அல்லது பொறுப்புறுதியுடன் உடற்பயிற்சியை தவறாமல் செய்வது மட்டுமல்ல,ஆரோக்கியமான மனதை கொண்டிருப்பது குறித்தும் மற்றும் வெளியுலகை மகிழ்வோடு கண்டு ஆராய்வதன் மூலம் தன்னை தொடர்ந்து நிலையாக பேணி வளர்ப்பதும் குறித்ததாகவே இது இருக்கிறது. இதை கருத்தில்கொண்டு, இந்தியாவின் முன்னணி உடற்தகுதி சங்கிலித்தொடர் நிறுவனங்களுள் ஒன்றானஃபிட்னஸ் ஒன்| நிறுவனரான திரு. விவேகானந்த், 7,000 ச.அடிக்கும் அதிகமான பரப்பளவில் கட்டப்பட்டுள்ள ,ஜஸ்ட் ஜம்ப்| என்ற பிரத்யேக வளாகத்தை திட்டமிட்டு வடிவமைத்திருக்கிறார். வயது என்பது ஒரு தடையாக இல்லாமல்| ஒட்டுமொத்த குடும்பத்துக்குமான உடற்தகுதி மற்றும் பொழுதுபோக்கு மையமாக இது செயல்படும்.

இதில் ஒரு மிகப்பெரிய டிராம்போலின் விளையாட்டுப்பகுதி அமைந்திருக்கிறது. இதில் ஒருவர் விரும்புகிற அளவு உயரத்துக்கு குதிக்கலாம்; உடலிலுள்ள கலோரிகளை இரண்டு மடங்காக இச்செயல்பாட்டின் மூலம் எரிப்பதோடு தங்களது உடம்பிலுள்ள அனைத்து தசைகளையும் செயலூக்கத்துடன் திறம்பட இயங்குமாறு செய்யலாம். இந்த டிராம்போலின் பகுதி மட்டுமின்றி குழந்தைகளுக்காக சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ள விளையாட்டுப்பகுதியும் இதில் இடம்பெற்றுள்ளது. குழந்தைகள், அவர்களின் இயக்க, உணர்திறன் மற்றும் நுண்ணறிவுத்திறன்களை சிறப்பாக வளர்த்தெடுக்க உதவுவதற்கு சமையல், பேக்கிங் மற்றும் கதை சொல்லும் வகுப்புகள் போன்ற பயிலரங்குகளும் மற்றும் நேர்த்தியாக திட்டமிடப்பட்டுள்ள பிற விளையாட்டு நிகழ்வுகளும் இதில் உள்ளடங்கும். இந்த ஒட்டுமொத்த வளாகமும், குழந்தைகள், வயது வந்த நபர்கள் மற்றும் குடும்பங்களுக்கான ஒரு நேர்த்தியான பொழுதுபோக்கு மண்டலமாகத் திகழுமாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த அனைத்து பிரிவினரது உடல்நலம் மற்றும் நலவாழ்வை கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இவ்வளாகத்தில் அதிகபட்சமாக குதூகல அம்சமும் இணைக்கப்பட்டிருப்பது இதன் தனிச்சிறப்பாகும்.

கூப்பர் இன்ஸ்ட்டியூட் நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஏரோபிக் சோதனை ஆய்வின் அடிப்படையில், 10 நிமிடங்கள் குதிப்பது, 30 நிமிட நேரம் ஓடுவதற்கு நிகரானது என்பது அறியப்பட்டுள்ளது. ஒரு டிராம்போலின் மீது குதிப்பது, ஜாகிங் (மெதுவோட்டம்) ஜாகிங் செய்வதை விட 68மூ அதிக பயனிப்பதாக இருக்கிறதென்றும் அதிக அதிக அழுத்தம் மற்றும் சிரமமின்றி முக்கியமான தசைகளை வலுப்படுத்தவும் இது உதவுகிறதென்று நாசா அமைப்பு சுட்டிக்காட்டியிருக்கிறது.

இந்நிகழ்ச்சியின்போது பேசிய ஃபிட்னஸ் ஒன் ரூ ஜஸ்ட் ஜம்ப்-ன் நிறுவனரான திரு. விவேகானந்த், ‘ஜஸ்ட் ஜம்ப் என்பது ஒரு ‘குடும்ப மகிழ்ச்சி மையம்| என்பதாகவே திகழ்கிறது. இங்கு ஒரு 3 வயது குழந்தையைப் போலவே அதே அளவுக்கு 70 வயதாகும் முதியவரும் மகிழ்ச்சியை பெற முடியும். இத்தகைய கருத்தாக்கம் என்பது, உலகின் பிற நாடுகளில் மிக பிரபலமாக இருந்தவருகிறது. அதே மாதிரியான ஒரு உகந்த சூழலைத்தான் இங்கு நாங்கள் கொண்டு வர விரும்புகிறோம். 2 உலகங்களின் மிகச்;சிறந்த அம்சங்களை மக்கள் இங்கு பெறவேண்டுமென்பதே எங்களது நோக்கமாகும். ஒரே நேரத்தில் 60 நபர்கள் வரை இருக்கக்கூடிய திறன்கொண்ட உலகத்தரம் வாய்ந்த டிராம்போலின் பகுதியானது, 2500-க்கும் அதிகமான சதுர.அடி பரப்பளவில் இங்கு உருவாக்கப்பட்டிருக்கிறது. ஏரோபிக்ஸ் நாட்டிய வகுப்புகள், பூட் கேம்ப்புகள், யோகா அமர்வுகள் மற்றும் குழந்தைகள் வெளிப்படுத்தாமல் மறைவாக கொண்டிருக்கும் செயல்திறன்களை வெளிக்கொணர அவர்களுக்கு உதவுவதற்காக படைப்பாக்க திறனுக்கான பயிலரங்குகள் ஆகியவற்றில் எமது விருந்தினர்களுக்கு உதவுவதற்கு தகுதிவாய்ந்த உதவியாளர்களும் இங்கு இருக்கின்றனர். தங்களது பேரப்பிள்ளைகள் விளையாட்டு நடவடிக்கைகளில் மகிழ்ச்சியோடு ஈடுபடுகின்றபோது மூத்த குடிமக்கள் ரிலாக்ஸ் செய்வதற்கு மசாஜ் பகுதியும் மற்றும் இங்கு வருகை தரும் அனைவரின் சுவை நரம்புகளுக்கு தீனி போட அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு உணவகமும் இதில் இடம்பெற்றுள்ளது. விளையாட்டே இல்லாமல் வெறும் படிப்பு, வேலை என்று மட்டும் இருப்பது குழந்தைகளை சுறுசுறுப்பற்ற சோம்பலானவர்களாக ஆக்கிவிடுமென்ற பொன்மொழிக்கேற்ப இன்றைய காலகட்டத்தில் சிறுகுழந்தைகள் அவர்களது பாடப்புத்தகங்களை வாசிப்பதைவிட தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளான பிற விளையாட்டு ஃ கேளிக்கை சாதனங்களின் மீதுதான் பசை போல ஒட்டிக்கொண்டிருக்கின்றனர். ஜஸ்ட் ஜம்ப் வழியாக, குழந்தைகள் முதல் வயது வந்த முதியவர்கள் வரை அனைவரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து வெளியுலகை கண்டு மகிழ்ந்து ஆய்வுசெய்வதற்கு ஒரு நல்ல சூழலை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம்,” என்று கூறினார்.

அதிவேகமாக, சிறிதும் இடைவேளையின்றி ஓடிக்கொண்டேயிருக்கிற இந்த துரித உலகச்சூழலில், குடும்பத்தோடு, தரமான நேரத்தை செலவிடுவதை பலரும் முக்கியமானதாகவோ அத்தியாவசியமானதாகவோ கருதுவதில்லை. குழந்தைகள்-வயதுவந்த நபர்கள்-பெற்றோர்கள் தாத்தா-பாட்டிகள் என அனைத்து வயதுப்பிரிவுகளைச் சேர்ந்த மக்கள், குதூகலமாக கேளிக்கையில் பங்கேற்கவும் மற்றும் புதிய நண்பர்களை இச்சந்திப்பில் பெற்றுக்கொள்ளவும் சமஅளவிலான வாய்ப்பை பெறுவதற்கு வழிவகுக்கிறவாறு ஜஸ்ட் ஜம்ப் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்கான சந்தா திட்டமானது ஒரு மணிநேரத்திற்கு ரூ. 300 என்பதிலிருந்து தொடங்குகிற நெகிழ்வுத்தன்மை கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆண்டு முழுவதும் தங்களை மகிழ்ச்சியாகவும், சுறுசுறுப்பாகவும், உடற்தகுதியோடும் வைத்துக்கொள்ள ஏதுவாக்குவதற்காக குடும்பங்களுக்கு மாதாந்திர, காலாண்டுக்கான மற்றும் ஆண்டுக்கான சந்தா திட்டங்களும் இங்கு கிடைக்கின்றன.

‘பேரார்வமும், எதிர்பார்ப்புகளும் கொண்ட ஒரு நகரமாக சென்னை இருக்கிறது. புதிய விஷயங்கள் எதுவாக இருப்பினும் அவைகளை வரவேற்க எப்போதும் தயாராக இருக்கும் பெருநகரமாகவும் சென்னை திகழ்கிறது. ஜஸ்ட் ஜம்ப் என்பது உற்சாகத்தோடும், மகிழ்ச்சியோடும் வாழ்க்கையை அனுபவித்து வாழவும் மற்றும் உங்கள் உடல்நலனோடு கேளிக்கை அம்சத்தையும் இணைத்து அதை ஆனந்தமான அனுபவமாக மாற்றுவதற்கான ஒரு வாய்ப்பாக இருக்கிறது,” என்று ஜஸ்ட் ஜம்ப்-ன் இணை நிறுவனரான திருமதி. மீனா விவேகானந்த்.