நிபுணன் திரைவிமர்சனம்

13th CIFF Red Carpet (January 10th)

சென்னையில் அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் கொடூரமாக சித்தரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார். கொலை செய்யப்பட்டவரின் உடலில் ஒரு சீரியல் நம்பரும், முகத்தில் மாஸ்க்கும் தடயமாக விட்டுச் செல்லப்பட்டிருக்கிறது. அந்த கொலை குறித்து விசாரிக்க அர்ஜுன் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்று அமைக்கப்படுகிறது.  அந்த குழுவில் பிரச்சனா, வரலட்சுமி அர்ஜுனுடன் இணைந்து அந்த கொலைகாரனை பிடிக்க உதவி செய்கின்றனர்.

சம்பவம் நடந்த இடத்தில் இருக்கும் சிறு தயடங்களை கூட அர்ஜுன் கவனமாக சேகரித்து வருகிறார். ஆனால் அதற்குள் டாக்டர் ஒருவர் அதேபோல கொடூர சித்தரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இந்த கொலை மூலம் இரு கொலைக்கும் தொடர்பு இருப்பதையும், அந்த சீரியல் கில்லரை விரைவில் பிடிக்க வேண்டும் என்றும் அர்ஜுன் முடிவு செய்கிறார். மேலும் அதற்கான முயற்சியில் இறங்கியிருக்கும் சமயத்தில், மூன்றாவதாக வழக்கறிஞர் ஒருவர் அதேபோல் கொலை செய்யப்படுகிறார். இந்த வழக்கில் தீவிர கவனம் செலுத்தும் அர்ஜுனுக்கு பேரதிர்ச்சி காத்திருக்கிறது.

ஏனென்றால், அந்த சீரியல் கில்லர், அடுத்ததாக குறிவைத்திருப்பது அர்ஜுனை தான் என்பதையும், அதற்கான காரணம் என்னவென்பதையும் கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகிறார்.  தன்னை ஏன் அந்த சீரியல் கில்லர் கொலை செய்ய முயற்சி செய்கிறான்? இதற்கு முன்பாக உயிரிழந்த மூன்று பேருக்கும், தனக்கும் என்ன சம்மந்தம்? என்று அர்ஜுன் தீவிர யோசனையில் இருக்கிறார். இதையெல்லாம் செய்யும் அந்த சீரியல் கில்லர் யார் என்பதையும், அவனை கைது செய்தாரா? என்பதே படத்தின் மீதக்கதை.

இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்